இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக, ஐ.நா. சபை சார்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உருவாக்கிய “அவர்கள் இரங்கங்களுக்கு முடிவில்லை’ என்ற குறும்படத்தின் முன்னோட்டக் காட்சி சென்னையில் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் முடிவில் வைகோ கூறுகையில்,
இலங்கைப் போர்க் குற்றம் தொடர்பாக நீதி விசாரணை இல்லை என்று சொல்லி விட்டனர்.
ஆனால், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படவேண்டும். அதற்கு ஐ.நா. சபை சார்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றார் அவர்.