இலங்கை மக்கள் இன்று முகங்கொடுக்கவுள்ள மற்றுமொரு சிக்கல்

222

இலங்கையில் அரச மற்றும் தனியார் வைத்தியதுறைகளை ஸ்தம்பிக்க வைக்கும் வகையிலான வேலைநிறுத்த போராட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று காலை 8 மணி தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்கே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வைத்தியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். அதில் குறிப்பாக வைத்தியர்களுக்கான கொடுப்பனவு, வாகன சலுகை உட்பட பல பிரச்சினைகள் அடங்குகின்றன.

இந்த நிலையில் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலருக்கு தெரியபடுத்தப்பட்டது. எனினும் அதற்கான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்தே குறித்த வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அண்மையில் ரயில்வே துறையின் பல்வேறு பிரிவை சேர்ந்த தொழிற்சங்கங்கள் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அரசாங்க சேவைகளை செய்வோர் தமக்கான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக மக்களுக்கு சிக்கல் நிலைமைகளை தோற்றுவிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

SHARE