இலங்கை மத்திய வங்கி மூன்று பிராந்திய காரியாலயங்களை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை மத்திய வங்கியின் மூன்று பிராந்திய காரியாலயங்கள் நாட்டின் மூன்று மாவட்டங்களில் நிறுவப்படும் என மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐந்தாண்டு கால பொருளாதாரத் திட்டத்தின் கிராம இராச்சிய எண்ணக்கருவிற்கு அமைய இவ்வாறு பிராந்திய காரியாலயங்கள் அமைக்கப்பட உள்ளன.
மொனராகல், புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் காரியாலயங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
அனைத்து விதமான வங்கி இணைப்புப் பணிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் ஏனைய கைத்தொழிலாளர்களுக்கு கடன் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.