மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும், இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (20.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மனித உரிமைச் சட்டங்கள் தொடர்பாகவும், பாதுகாப்பு தரப்பினர் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழவிற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பாகவும், சிறு குற்றம், பாரிய குற்றங்கள் இடம்பெறும்போது விசாரணைகள் மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் அதிகாரிகள்
இந்தக் கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி.தெஹிதெனிய, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமால் புஞ்சிஹேவா, பொலிஸ், இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.