இலங்கை மாணவிக்கு அவுஸ்திரேலியாவில் மாணவிகள் நிதி உதவி!

276

australia-map-flag

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கை மாணவிக்கு ஏனைய மாணவர்கள் இணைந்து கல்விக்காக நிதிசேர்த்துக்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமுதினி சுலோச்சனா என்ற இந்த மாணவி பொருளாதாரத்துறையில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவருகிறார்.

இதற்காக அவருக்கு 20ஆயிரம் டொலர்களை தேவை. எனினும் அதனை சுலோச்சனாவினால் வழங்க முடியாமையால் அவரின் வீசாவை முடிவுறுத்தும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து அவரின் நண்பி ஒருவர் மேற்கொண்ட பிரசாரத்தின் பேரில் குறித்தமாணவியுடன் பயிலும் மாணவர்கள், இணைந்து 18,500 டொலர்களை சேர்த்தக்கொடுத்துள்ளனர் என்று செய்திசேவை ஒன்று தெரிவித்துள்ளது.

SHARE