இலங்கை மின்சார சபையின் 47 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வவுனியா பிராந்திய மின்சார சபை காரியாலயத்தில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
வவுனியா மின்சார பொறியியலாளர் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் போன்ற பலரும் கலந்து கொண்டு இரத்ததானமாக வழங்கியிருந்தார்கள்.
இந்த இரத்ததான நிகழ்வானது வவுனியா பொது வைத்தியசாலை இரத்த வங்கியின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் இரத்த வங்கியில் இரத்தத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியாசலை பணிப்பாளர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.