இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஹெடிங்லி லீட்சில் மைதானத்தில் ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
அதன்படி இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களாக அணித்தலைவர் குக், ஹால்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.
குக் நிதானமாக விளையாடி வந்த நிலையில் அவரை 16 ஓட்டங்களில் சானக்க வீழ்த்தினார். தொடர்ந்து பந்துவீச்சில் மிரட்டிய அவர் காம்டன், ரூட் ஆகியோர்களையும் டக்-அவுட்டாக வெளியேற்றினார்.
இதைத் தொடர்ந்து வந்த ஜேம்ஸ் வின்ஸ் 9 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்சும் (12) நிலைக்கவில்லை.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹால்ஸ், பேர்ஸ்டவ் ஆகியோர் பொறுமையாக ஆடி அரைசதம் கடந்தனர்.
நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு171 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஹால்ஸ் 71 ஓட்டங்களுடனும், பேர்ஸ்டவ் 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி சார்பில், அபாரமாக பந்து வீசிய சானக்க 3 விக்கெட்டுகளையும், நுவன் பிரதீப், தமிங்க பிரசாத்தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.