இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பிலான புகைப்படம் ஒன்றை மோசடியான முறையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்திய பாரதீய ஜனதா கட்சி பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் மந்தப் போசாக்கு நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர், பத்திரிகைப் புகைப்படம் ஒன்றை காண்பித்துள்ளார்.
உண்மையில் அந்தப் புகைப்படம் கேரள மக்களுடையதல்ல எனவும் இலங்கை அகதிகளினதுடையது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ப.ஜ.க தலைவர் அமித் ஷா இந்தப் புகைப்படத்தை காண்பித்திருந்தார்.
2009ம் ஆண்டு யுத்த சூன்ய வலயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கட்சி பிழையாக பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அட்டபாடி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் போசாக்கு குழந்தை உயிரிழந்ததாகத் தெரிவித்து அவுட்லுக் என்ற இந்திய சஞ்சிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியினையே பஜக துணையாகக் கொண்டு பிரச்சாரம் செய்திருந்தது.