ரயில் போக்குவரத்தை விரிவு படுத்தும் நோக்கில் ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் ரயில் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பயணிகள் நன்மை அடைய கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து வழங்கப்படாத நாட்டின் பல பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து வழங்குவதாக தற்போதைய அமைச்சர்கள் கடந்த தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.