அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான பிரதி ராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் இந்த வாரத்தில் இலங்கை வரவுள்ளார்.
முக்கிய பேச்சுக்களின் நிமித்தமே அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன் போது இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அவரின் விஜயம் இடம்பெறுகிறது.
இந்த அறிக்கையில் போர்க்குற்றம் தொடர்பில் அனைத்து ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பிஷ்வாலுடன் அமெரிக்க உயர் அதிகாரிகளும் இலங்கை வரவுள்ளனர்.