இலங்கை வழங்கும் உதவிகள் குறித்து உகண்டா ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

155

ஆபிரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உகண்டாவின் ஜனாதிபதி ஜொவேரி முசவெரியை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. தமது நாட்டின் தொழில்நுட்ப பயிற்சி நிலையமொன்றை தரமுயர்த்துவதில் இலங்கை வழங்கிய உதவிகளுக்கு உகண்டா ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.

மேலும், தமது நாட்டின் பொருளாதாரத்தில் இலங்கை முதலீட்டாளர் வகிக்கும் பங்கு பற்றியும் அவர் மேலும் குறிப்பிட்டார். சர்வதேச அரங்கில் இலங்கைக்கு உகண்டா வழங்கும் உதவிகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

SHARE