இலங்கை விவகாரம் குறித்து சந்திரிக்கா தென் ஆபிரிக்காவில் உரை

359
இலங்கை விவகாரம் குறித்து சந்திரிக்கா தென் ஆபிரிக்காவில் உரை

இலங்கை விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தென் ஆபிரிக்காவில் உரையாற்றவுள்ளார். தென் ஆபிரிக்காவில் ஐக்கிய நாடுகளின் சமாதானம் குறித்த கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட உள்ளது. இந்தக் கருத்தரங்கில் சந்திரிக்கா பங்கேற்க உள்ளார்.
சமாதானம் தொடர்பில் இலங்கையில் கற்றுக்கொண்டவை என்ற தலைப்பில் சந்திரிக்கா உரையாற்றவுள்ளார். பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் தொடர்பில் இந்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது

SHARE