கச்சத்தீவை மீட்க கோரும் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா வழக்குடன், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வழக்கும் ஒன்றாக விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கச்சத்தீவை மீட்க கோரி கடந்த 2008ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த இரண்டு வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், கருணாநிதி தரப்பு கோரிக்கையை ஏற்று 2 வழக்குகளையும் ஒன்றாக இணைத்த உச்ச நீதிமன்றம், இனிமேல் இரண்டு வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.