இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் இலவசமாக பயணிக்க வழங்கப்பட்ட காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தொழிலாளார் தினத்தை முன்னிட்டு நேற்று காலை 06.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை தெற்கு வீதி வழியாக பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடமாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.