இலங்கை ஸ்னைப் பிரிவு இராணுவ சிப்பாய் மாலைதீவில் கைது

329

இலங்கை ஸ்னைப் பிரிவு இராணுவ சிப்பாய் மாலைதீவில் கைது

இலங்கை ஸ்னைப்பர் பிரிவு இராணுவ வீரர் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் வரலாற்றில் பாரியளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டு சில தினங்களில் இந்த இலங்கை இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்னதாக குறித்த இராணுவ வீரரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் குறித்த இலங்கை சிப்பாய் கைது செய்யப்பட்டதனை மாலைதீவு அதிகாரிகள் உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னைப்பர் துப்பாக்கிகளுக்காக பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீனை கொலை செய்யும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆளும் கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த சூழ்ச்சித்திட்டத்துடன் இலங்கை இராணுவ வீரருக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் மாலைதீவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE