இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் 40 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக- இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

149

இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் 40 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு

அத்துடன் இவர்களுள் 36 பேர் அரசாங்க ஊழியர்கள் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலஞ்சம் பெற்றுக் கொள்ளப்படும் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் 1954 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறும், முறைப்பாடுகள் தொடர்பில் இரகசியத் தன்மை பேணப்படுவதுடன், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

2 கோடி ரூபா இலஞ்சம் பெற்றமையே இவ் வருடத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட அதிகூடிய இஞ்சத் தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE