இலஞ்சம் பெற்றுக் கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக புதிய திட்டம் ஒன்றுநடைமுறை செய்யப்பட உள்ளது.
மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை காப்பாற்ற முயற்சிக்கும் அதிகாரிகளை தடுக்கும் விசேட திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் சாரதிகளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் காப்பாற்றக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றது.
இதேவேளை, மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்களை கண்காணிப்பதற்கு விசேட திட்டம் ஒன்று எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது.
மேலும், மோட்டார் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பிலான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்க முடியும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக வாகன விபத்துக்களை வரையறுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.