இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை உரியவரிடம் வழங்குவதற்காக 500 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டில் இந்த பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் நீதவானிடம் இருந்து கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இவர் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.