மாந்தை மேற்கு கருங்கண்டல் புளியங்குளம் கிராமத்தில், இரு கண்களையும் இழந்து புலம்பெயர்ந்து வாழும் முன்னாள் போராளியின் நிதிப்பங்களிப்புடன் இலவச கணினி வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
எழுத்தாளர், கவிஞர், சமுக சேவையாளர் எனப்பன்முக ஆளுமைகள் கொண்ட செல்வி சந்திரகலா (வெற்றிச்செல்வி) தலைமையில் கடந்த வெள்ளிகிழமை( 23) அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வட-கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மகேந்திரன் ரகு ஆகியோர் கலந்துகொண்டு வகுப்புகளை ஆரம்பித்து வைத்தனர்.