கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு அரசடி சௌக்கிய பராமரிப்பு மருத்துவபீட மாணவர்களே இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடாத்தியுள்ளனர்.
மாலெபயில் உள்ள தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தினை எதிர்த்தும், இலவச கல்வியை பாதுகாக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அரசடி சௌக்கிய பராமரிப்பு மருத்துவ பீடத்திற்கு முன்னால் குறித்த மாணவர்களால் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி மட்டக்களப்பு நகர் வரை சென்று மீண்டும் மருத்துவ பீடத்தை அடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.