இளம்பெண்களை கொன்று சாத்தான் வழிபாடு நடத்திய கொடூர கும்பல்

211

அமெரிக்காவில் இளம்பெண்களை கொன்று, சாத்தான் வழிபாடு நடத்திய கொடூர கும்பல் ஒன்றை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த தெருச்சண்டை கும்பல் ஒன்றை அண்மையில் சந்தேகத்தின்பேரில் பொலிசார் விசாரித்துள்ளனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, எம்எஸ் 13 எனும் பெயருடைய அந்த தெருச்சண்டை கும்பலில் உள்ள 2 இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவிகளை கடத்திச் சென்று, கொடூரமாகக் கொன்று, சாத்தான் வழிபாடு நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இவ்வாறு 8 பேரை அவர்கள் கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் ஹூஸ்டன், டெக்சாஸ், போன்ற சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கடத்திவரப்பட்டு, இந்த சாத்தான் வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.

மேலும், அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, பின்னர் ஹாக்கி மட்டையால் அடித்துக் கொன்றபிறகே, உடலை வெட்டி சாத்தான் வழிபாடு நடத்தியதாகவும் கொலையாளிகள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதனால், பல கொலை வழக்குகளின் மர்ம முடிச்சு அவிழ்ந்துள்ளதாகக் கூறிய பொலிசார், உடனடியாக அந்த கும்பலில் உள்ள 14 நபர்களை கைது செய்துள்ள பொலிசார் அதில் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

கடந்த 1980களில் இருந்தே அமெரிக்காவில் பிரபலமாகியுள்ள குறித்த தெருச்சண்டை கும்பலானது தற்போது கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளது விசாரணை அதிகாரிகளை வியப்படைய செய்துள்ளது.

இருப்பினும் தெருச்சண்டையில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும், அவர்கள் போதை மருந்துகளைப் பயன்படுத்துவதால், என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கும்பலின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றமானது நிரூபிக்கப்பட்டால் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE