இளம்பெண்கள் இதை தான் அணிய வேண்டும்… ஜோதிகா வெளிப்படை

205

இளம்பெண்கள் சேலை அணிவதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

மயிலாப்பூரில் பழங்கால சேலைகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் தனது குடும்பத்தினருடன் நடிகை ஜோதிகா கலந்து கொண்டார். சேலை கண்காட்சியை பார்வையிட்ட ஜோதிகா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் இந்த காலத்து இளம்பெண்கள் சேலை அணிவதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும் என தெரிவித்தார். மேலும் தங்களது பண்பாட்டை பறைசாற்றும் விதமாக தங்களிடம் உள்ள பழங்கால சேலைகளை இளம்பெண்கள் ஒதுக்கிவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சேலை கண்காட்சியில் ஏராளமான பழங்கால சேலைகள், வெவ்வேறு நூல்வகைகளால் உருவாக்கப்பட்ட சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நடிகை ஜோதிகா வருகை முன்னிட்டு சேலை கண்காட்சிக்கு ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

SHARE