இளம்பெண்ணை கடத்திச்சென்று சிறை வைத்திருந்த இளைஞன்

302
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இளம் பெண்ணை கடத்திச் சென்று இளைஞன் ஒருவர் சிறை வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டோக்கியோவில் Ana Saito என்ற 15 வயது இளம் பெண் ஒருவர் அவரது குடியிருப்பு பகுதியில் இருந்து திடீரென்று மாயமானார்.

அந்த இளம் பெண் மாயமானது குறித்து விளக்கமளிக்கும் வகையில் இனிமேல் தம்மை தேட வேண்டாம் என ஒரு குறிப்பும் அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கப்பெற்றது.

இதனிடையே இந்த குறிப்பு குறித்து சந்தேகம் தெரிவித்த குடும்பத்தினர் இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாயமானதாக கருதப்பட்ட அந்த இளம்பெண் 2 ஆண்டுகளுக்கு பின்னர் திடீரென்று மீண்டு வந்து தமது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.

மேலும் கடந்த 2 ஆண்டுகளில் தமக்கு நேர்ந்துள்ளது குறித்து விசாரணை அதிகாரிகளிடமும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே Ana Saito என்பவரை கடத்தியதாக கூறப்படும் நபர் கழுத்தில் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடத்தப்பட்ட இளம் பெண்ணிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளில் 2 குடியிருப்புகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும்,

எப்போதும் கண்காணிக்கப்பட்டு வந்ததால் தமக்கு அங்கிருந்து தப்ப முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது கடத்திச் சென்ற நபர் அறைக்கதவை பூட்டாமல் சென்றதால் தாம் அங்கிருந்து தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE