தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்ற இளம்பெண்ணை நபர் ஒருவர் கற்பழிக்க முயன்றபோது அவரிடமிருந்து தப்பிக்க மலையின் உச்சியில் இருந்து குதித்த பெண் தற்போது கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமெரிக்க நாட்டை சேர்ந்த Hannah Gavios(23) என்ற இளம்பெண் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ஆசிரியையாக பணிபுரியும் இவர் தெற்கு தாய்லாந்தில் உள்ள Krabi என்ற பகுதியில் தங்கியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இப்பகுதியில் இருந்து சில கி.மீ தொலைவில் உள்ள பகுதிகளை சுற்றி பார்த்தபோது இரவு 11 மணி ஆகியுள்ளது.
தங்கியுள்ள வீட்டிற்கு தனியாக திரும்பிச் செல்ல அச்சப்பட்ட அவர் அருகில் உள்ள சுற்றுலா தள அலுவலகத்திற்கு சென்று உதவி கேட்டுள்ளார்.
அப்போது, அங்கு பணிபுரிந்த 28 வயதான நபர் அவரை அழைத்துச் சென்று அறையில் விட சம்மதித்துள்ளார்.
நபரின் தோற்றத்தை கண்ட பெண் எதோ விபரீதம் நடக்கப் போகிறது என சந்தேகம் அடைந்துள்ளார். வேறு வழியில்லாத காரணத்தினால் அவருடன் காட்டுப்பகுதியில் நடந்துச் செல்ல சம்மதித்துள்ளார்.
ஆனால், தங்கியுள்ள அறையை நோக்கி செல்லாமல் அந்த நபர் பெணணை எதிர் திசையில் மலையின் உச்சிக்கு செல்லும் வழியில் அழைத்துச் சென்றுள்ளார்.
சில நிமிடங்கள் பயணத்திற்கு பின்னர் திடீரென அந்த நபர் பெண் மீது பாய்ந்துள்ளார். பெண்ணை கீழே தள்ளிய அந்த நபர் பெண்ணின் உடைகளை கிழிக்க முயன்றுள்ளார்.
ஆனால், நபரின் தாக்குதலை எதிர்க்கொண்ட பெண் அவரது காதை பாதியாக கடித்து துப்பிவிட்டு அங்கிருந்து எழுந்து ஓடியுள்ளார்.
வழி முழுவதும் இருட்டாக இருந்ததால், ஓரிடத்தில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில், அவரது இடுப்பு எழும்பு உடைத்துள்ளது.
இச்சூழலை பயன்படுத்திக்கொண்ட நபர் வலியால் கதறி துடித்த பெண்ணிடம் பாலியல் தாக்குதலை நடத்தியுள்ளார். ஆனால், கற்பழிக்கவில்லை.
சில மணி நேரத்திற்கு பிறகு அந்த நபர் அங்கிருந்து தப்பியுள்ளார். ஓர் இரவு முழுவதும் பெண் அதே இடத்தில் வலியால் துடித்துள்ளார். மறுநாள் காலையில் அவ்வழியாக சென்ற நபர்கள் அவரை காப்பாற்றி தற்போது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன