இளம்பெண் கொலை தாயின் உடலின் அருகே விடிய விடிய அழுது கொண்டிருந்த சிறுவன்…!

231

திருப்பூர் அடுத்த ஊத்துக்குழியில் இருந்து கோவை செல்லும் பைபாஸ் சாலையில் பயணிகள் விடுதி உள்ளது. இங்கு அந்த வழியாக வந்து செல்லும் லாரி டிரைவர்கள் ஓய்வு எடுத்து செல்வார்கள்.

இன்று அதிகாலை இதன் அருகே ஒரு பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே 2 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அழுதுக் கொண்டே இருந்தான். சத்தம் கேட்டு சென்ற பொதுமக்கள் இதைப்பார்த்து ஊத்துக்குழி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய போது கொலை செய்யப்பட்ட இளம்பெண் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவரது உடல் அருகே அழுது கொண்டு இருந்த சிறுவன் அவரது மகன் என்றும் தெரியவந்தது. மேலும் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு அந்த பெண்ணின் முகம் முழுவதும் ரத்தகறையாக இருந்தது. மேலும் இந்த பெண்ணை யாராவது லாரி டிரைவர்கள் கடத்தி வந்து கொலை செய்து விட்டு சென்று இருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் அதிகாலை 2 மணி அளவில் இந்த கொலை நடந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

தனது தாய் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை அறியாத சிறுவன், தாயின் உடல் அருகே உட்கார்ந்து விடிய, விடிய, கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தான். சிறுவன் உடல் முழுவதும் கொசு கடியாக இருந்தது. தாயின் உடல் அருகில் அழுது கொண்டு தவித்த சிறுவனை பார்த்த போது சோகமாக இருந்தது.

இதையடுத்து போலீசார் சிறுவனை மீட்டனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணை அடையாளம் காண போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை இந்த பகுதியில் வந்து சென்ற வாகனங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE