இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

135

 

 

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று (15) தெரிவித்தனர்.

வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் காணப்பட்டதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த குடும்பஸ்தரின் சடலத்தை மீட்டனர்.

குறித்த குடும்பஸ்தர் தனது பிள்ளையின் தொட்டிலில் கட்டப்பட்ட சேலையில் தூக்கிட்டு தொங்கியிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்டவர் அப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய கதிரேவேலு சஞ்சீவகாந்தி என்பவராவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE