புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிபுரம் பிரதேசத்தில இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இளம் குடும்பஸ்தர் ஒருவர், துப்பாக்கி பிரயோகத்தில் பலியாகியுள்ளார்.
26 வயதுடைய ஒருவரே மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் மனைவியும் பிள்ளைகளும் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, வீட்டில் இவர் மாத்திரமே இருந்துள்ளார்.
இவர் தனிமையில் உறங்கிக்கொண்டிருந்தபோதே, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதீக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்