பிரித்தானியாவில் இளம்தாய் நபர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரித்தானியாவின் Essex கவுண்டியை சேர்ந்தவர் Mary-Anne Connors (23), இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த மாதம் 23ஆம் திகதி Mary வீட்டுக்கு வந்த நபர், Mary-யிடம் உன் முகத்தின் மீது ஏறி நின்று நடனமாட போகிறேன் என கூறியுள்ளார்.
இதை கேட்டு சத்தம் போட்ட Mary-ஐ கடுமையாக தாக்கி கீழே தள்ளி விட்டு அவரின் முகத்தின் மீது ஏறி நடனம் ஆடியுள்ளார்.
சம்பவத்துக்கு பின்னர் குறித்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து படுகாயங்களுடன் வலியால் Mary துடிக்க அவரின் குழந்தையும் அழுதுள்ளது.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
அவரின் மூக்கு, தாடை, காது, தலைப்பகுதியில் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதோடு அவரின் மண்ணீரலில் இருந்து வரும் இரத்த போக்கை நிறுத்த ஆப்ரேஷனும் செய்யப்பட்டுள்ளது.
இதோடு Mary-ன் பற்களும் உடைக்கப்பட்டுள்ளன.
Mary-ன் தாய் Mary Connors (50) கூறுகையில், இடது கண் பகுதியிலும் என் மகளுக்கு அடிபட்டுள்ளதால் அவர் பார்வையை இழக்க நேரிடலாம்.
இவ்வளவு காயத்துக்கு பிறகும் அவர் உயிருடன் இருப்பது சற்று ஆறுதலாக உள்ளது என கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இதில் John Paul Berry (28) என்ற நபருக்கு தொடர்பு இருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.
தலைமறைவாக உள்ள John-ஐ தேடி வரும் பொலிசார் அவரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.