ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் கடந்த கால ரகசிய வாழ்க்கை அம்பலமாகியுள்ளது.
உலக அரசியலில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் விளாடிமிர் புடின்.
புடினுக்கும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுமான அலினா கபயேவா ஆகிய இருவரும் ரகசியமாக காதலித்து வருகின்றனர் என்ற செய்தி ரஷ்ய நாட்டு செய்திகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புடினின் இளம் வயது காதல் வாழ்க்கை தெரியவந்துள்ளது. மிகவும் ஸ்டைலான ஹேர்டைலுடன் இளம் பெண் ஒருவருடன் கையை கோர்த்துக்கொண்டு நடனமாடுகிறார்.
இது அவரது குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படமாக கூறப்படுகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் யார் என்ற விவரம் தெரியவரவில்லை.
இருப்பினும் இது புடினின் முன்னாள் ரகசிய வாழ்க்கை என கூறப்படுகிறது.