இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட இவைதான் காரணமாம்

145

உலகின் கொடிய நோய்களில் முக்கியமான ஒன்று மாரடைப்பு. மேலும் எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க நேரம் கிடைக்கும் ஆனால் மாரடைப்பிலிருந்து தப்பிக்க இயலாது.

நன்றாக இருக்கும் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணடைவது தற்போது இயல்பாகி வருகிறது.

மாரடைப்பு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு, பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதற்கு நம்முடைய சில மோசமான வாழ்வியல்முறைகளும் காரணமாக உள்ளது.

மாரடைப்பு ஏற்படமுக்கிய காரணங்கள்
உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் இதயத்துக்குச் செல்லும் கரோனரி ரத்தக் குழாய்கள் தடித்து வீங்குவதால், இதயத்துக்கு ரத்தம் செல்வது கொஞ்சம் கொஞ்சமாகத் தடைப்படுகிறது. இதனால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

புகைப்பிடித்தல்

தினமும் ஒருவர் புகைப்பிடிப்பதால், புகையிலையில் உள்ள நிக்கோடின் மற்றும் சில வேதிப் பொருட்கள் நுரையீரலில் படிந்து, நுரையீரலின் செயல்திறனைக் குறைக்கிறது. இதனால் ரத்தக் குழாய்களில் அந்த வேதிப் பொருட்கள் படிந்து அடைப்பை உண்டாக்குவதால், மாரடைப்பு பிரச்சனை ஏற்படுகிறது.

உடல் பருமன்

ஒருவரின் அதிகப்படியான உடல் பருமன், மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கியமான மறைமுகக் காரணியாகும். எனெனில் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் தாக்கும். எனவே சர்க்கரை நோய், உடல் பருமன் இரண்டும் ஒன்று சேர்வதால், கரோனரி ரத்தக் குழாய்கள் வீங்கி, மாரடைப்பு பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

கொலஸ்ட்ரால்

ஒருவரின் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அவை இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் படிந்து, ரத்த ஓட்டத்தைத் தடை செய்கிறது. எனவே இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாத சமயத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், ரத்தக் குழாய்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சீரான முறையில் இதயத்திற்கு ரத்தம் செல்வது தடுக்கப்படுவதால், மாரடைப்பு ஏற்படுகிறது.

SHARE