இளவரசர் ஜோர்ஜ் பிறப்பைவிட கறுப்பு ஜுலை செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட பி.பி.சி சிங்கள சேவை தயாரிப்பாளர் 1 கோடி பெறுகிறார்
பிரித்தானியாவில் பி.பி.சி சிங்கள சேவையில் பணியாற்றிய சந்தன கீர்த்தி பண்டார என்ற ஊடகவியலாளர் தான் முறையற்ற விதத்தில் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாக பி.பி.சிக்கு எதிராக தொடுத்த வழக்கில் வெற்றிபெற்றதில் அவருக்கு 50,000 பவுண்டுகளை ( ஏறத்தாழ 1 கோடி ரூபா ) வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு பண்டார ( 57 வயது ) தயாரிப்பாளராக பணியில் இருந்தபோது இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேட் ஆகியோருக்கு குழந்தை (இளவரசர் ஜோர்ஜ்) பிறந்தபோது அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இலங்கையில் கறுப்பு ஜுலை தொடர்பான ஒரு செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்த சம்பவத்துக்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டு இறுதி எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தார்.
இளவரசர் ஜோர்ஜ் பிறந்த மறுநாள் 23 ஜூலை 2013 (30 ஆவது ஆண்டு) ஆகும். ஆனால் அன்று தான் இலங்கையில் கறுப்பு ஜூலை இனக்கலவரம் தொடங்கிய நாள். இதன் காரணமாக அன்று பொறுப்பில் இருந்த பண்டார ஜோர்ஜின் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பி.பி.சி முகாமைத்துவத்தின் அழுத்தங்களுக்கு எதிராக கறுப்பு ஜூலை செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இதன் காரணமாகவே அவர் எச்சரிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி , தனது சக பணியாளர் ஒருவர் மீது தகாத வார்த்தைகளால் பண்டார ஏசினார் என்றும் ஏனையவர்கள் மீது சத்தம் போட்டார் என்றும் கூறி பி.பி.சி நிர்வாகத்தினால் அவர் பனி நீக்கம் செய்யப்பட்டார்.
பண்டாரவின் தந்தையார் சிங்களவர். தயார் தமிழர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசாங்கங்கள் அடக்குமுறைகளை மேற்கொண்டிருந்தன என்ற தனது கருத்துக்கள் காரணமாக தான் சிங்கள சேவையில் தான் வேண்டுமென்றே பழிவாங்கப்பட்டதாக பண்டார நீதிமன்றத்தில் குற்றம் சட்டியிருந்தார்.
ஆனால் இந்த வழக்கில் பண்டார தான் இன ரீதியாக தான் பழிவாங்கப்பட்டதாக கூறப்பட்டமை நிரூபிக்கப்படவில்லை. இருந்தபோதிலும், 18 வருடங்களாக பி.பி.சி யின் சிரேஷ்ட தயாரிப்பாளராக பணியாற்றிய பண்டார பணிநீக்கம் செய்யப்பட்டமுறைமை பிழையானது என்று நீதிமன்றம் குற்றம் கண்டது.
பண்டார பணி நீக்கம் செய்யப்படுவதற்கு அவர் இளவரசர் ஜோர்ஜ் பிறந்த செய்தி தொடர்பில் நடந்துகொண்ட விதம் காரணமாக இருந்திருக்கிறது என்றும் 18 வருடங்களாக சிறந்த முறையில் பணியாற்றிய ஒரு தயாரிப்பாளருக்கு அவ்வாறு எழுத்துமூலமாக இறுதி எச்சரிக்கை 2014 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டிருந்தமை கூடுதலான தண்டனை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்காரமனாக பாண்டாரவுக்கு 50,000 பவுண்டுகளை பி.பி.சி வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பி.பி.சியின் பேச்சாளர் தெரிவித்தார்.