இளவரசர் பிலிப் மரணமடைந்தால் என்ன நடக்கும் மற்றும் எப்படி அறிவிப்பார்கள்

222

பிரித்தானியாவின் லண்டனில் உள்ள பக்கிங்கம் அரண்மைக்கு நேற்று அரச குடும்பத்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வர வேண்டும் என உத்தரவு வந்தது.

இதையடுத்து பிரித்தானிய இளவரசர் பிலிப் (95) உயிரிழந்து விட்டார் என வதந்திகள் தீயாக பரவின.

பின்னர், அதில் உண்மையில்லை எனவும், பிலிப் நன்றாக உள்ளார் எனவும் பக்கிங்கம் அரண்மனை அறிவித்தது.

மேலும், உடல் நிலை மற்றும் வயது முதிர்வு காரணமாக பிலிப் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் எவ்விதமான அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார் எனவும் அறிவிக்கபட்டது.

இந்நிலையில், பிலிப் உயிரிழந்தால் எப்படி அதை அறிவிப்பார்கள் எனவும், என்னென்ன சடங்குகள் நடக்கும் எனவும் தற்போது தெரியவந்துள்ளது.

இளவரசர் பிலிப் இறந்தால் அந்த செய்தி முதலில் BBC செய்தி ஊடகத்துக்கு தெரிவிக்கப்படும்.

இரவு நேரங்களில் இந்த சம்பவம் நேர்ந்தால், அதை காலை எட்டு மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.

பொதுவாக ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமான Westminster Hallல் தான் சடலத்தை வைப்பார்கள்.

ஆனால் அங்கு வேண்டாம் என பிலிப் ஏற்கனவே கூறியுள்ளார். அதனால் இளவரசி டயானா இறக்கும் போது அவர் சடலத்தை St James அரண்மனையில் வைத்தது போலவே பிலிப்புக்கும் செய்வார்கள் என தெரிகிறது.

பொதுமக்கள் சடலத்தை பார்க்க அனுமதியில்லை எனவும் தெரியவந்துள்ளது.

பின்னர், Windsor Castle மைதானத்தில் அமைந்துள்ள Frogmore தோட்டத்தில் இறந்த பின்னர் இளவரசர் பிலிப் உடல் புதைக்கபடும்.

இந்த சடங்குகளுக்கு பின்னர் பிலிப்பின் மனைவி எலிசபெத் அடுத்த எட்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பார்.

பின்னர் அரச குடும்பத்தின் சார்பில் 30 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கபடும். அதன் பின்னரே மகாராணி எலிசபெத் தன்னுடைய அரச கடமைகளுக்கு திரும்புவார்.

இளவரசர் பிலிப்புக்கும், மகாராணி எலிசபத்துக்கும் திருமணமாகி 70 வருடங்கள் ஆகிறது. இருவரின் உடல் நலம் குறித்து சில வருடங்களாகவே வதந்திகள் அடிக்கடி பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE