பிரித்தானியா இளவரசி கேட் மிடில்டன் நல்ல உயரம், உயரத்துக்கு ஏற்ற எடை என பார்ப்பதற்கு செதுக்கி வச்ச சிலை மாதிரி இருப்பார்.
இவரின் உடல்வாகுக்கு ஏற்றவாறு ஆடைகளை சரியான முறையில் தெரிவு செய்து அணிவார்.
பிரித்தானியாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் சரி, பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் சரி, நல்ல பிட்டான ஆடைகளை அணிவார்.
இவர் அணியும் ஆடைகள் போன்று உடனடியாக வடிவமைக்கப்பட்டு, பிரித்தானியாவில் விற்பனை செய்யப்படுவதால் அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
தற்போது, இந்த வரிசையில் மேகன் மெர்க்கலும் இணைந்துள்ளார். ஒரு நடிகையாக இருந்த காரணத்தால், மெர்க்கல் தெரிவு செய்யும் ஆடைகள் பேஷனாக இருக்கும். இருப்பினும் இவரது ஆடைகளில் சற்று கவர்ச்சி தெரிகிறது என விமர்சனங்கள் சமீபத்தில் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
அரச குடும்பத்து மருமகள்கள் என்பதால், இவர்கள் நெயில்பாலிஷ் போடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 6 மணிக்கு பின்னர் தலையில் தொப்பி அணிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
மேலும், பொதுஇடங்களில் கலந்துகொள்ளும்போது சற்று கனமான துணியில் தயார் செய்யப்பட்ட ஆடைகளை அணியவேண்டும். ஏனெனில் அவை காற்றில் பறந்து அதனை புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுக்க வாய்ப்புள்ளது என்பதால் இந்த கட்டுப்பாடு.
இந்த கட்டுப்பாடுகள் மேகன் மெர்க்கலுக்கும் பொருந்தும் என்பதால் அவர், இனி ஆடை விடயத்தில் கேட் மிடில்டனை போல் நடந்துகொள்வாரா? அல்லது அவரை முந்துவாரா? என எதிர்பார்க்கப்படுகிறது.