இளவரசி டயானாவின் முன்னாள் காதலருக்கு மாரடைப்பு

221

பிரித்தானிய இளவரசி டயானாவின் முன்னாள் காதலருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் உயிரிழந்த இளவரசி டயானாவும் ராணுவ வீரரான ஜேம்ஸ் ஹெவிட்(59) என்பவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

டயானாவிற்கு 25 வயதாக இருந்தபோது 28 வயதான ஜேம்ஸ் ஹெவிட் வளைகுடா நாடுகளில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இருவரின் காதலும் வெளியுலகத்திற்கு தெரியவந்தபோது இருவரையும் பிரிக்க அரசுக் குடும்பம் தீர்மானித்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 1991-ம் ஆண்டு ஈராக் நாட்டிற்கு கட்டாயப்படுத்தி ஜேம்ஸ் ஹெவிட் அனுப்ப்பட்டார். இதனால் இருவரின் காதலும் முறிந்தது.

சில தினங்களுக்கு முன்னர் இளவரசர் ஹரியின் உண்மையான தந்தை ஜேம்ஸ் ஹெவிட் தான் என வதந்தி பரவியுள்ளது.

ஆனால், தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஜேம்ஸ் ஹெவிட் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இந்நிலையில், ஜேம்ஸ் ஹெவிட்டிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் உள்ள Royal Devon மற்றும் Exeter மருத்துவமனையில் ஜேம்ஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை எனவும் மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

SHARE