இளவாலை வடலியடப்பு பகுதியில் மீட்க்கப்பட்ட சிசுவை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை.

261

யாழ்ப்பாணம் இளவாலை வடலியடப்பு பகுதியில் மீட்க்கப்பட்ட சிசுவை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இளவாலை வடலியடப்பு பகுதி கோயிலுக்கு அருகில் பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிறந்து 10 நாட்களேயான சிசு இன்று காலை மீட்க்கப்பட்டது.

இந்த சிசு தெல்லிப்பளை மருத்துவமனைக்குச் கொண்டுச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது.

இந்ந நிலையில் மூன்று அரை கிலோ கிராம் நிறையுடைய குறித்த குழந்தை தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை சிசுவின் தாயை கைது செய்ய இளவாலை பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.baby

SHARE