இளைஞனின் சடலம் மீட்பு…

281

அகுரஸ்ஸ லத்துவ பிரதேசத்தில் நில்வளா கங்கைக்கு அருகிலிருந்து 04.05.2016 அன்று (புதன்கிழமை) இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

04.05.2016 அன்று மாலை, அகுரஸ்ஸ லத்துவ பிரதேசத்தில் நில்வளா கங்கைக்கு அருகில் பலா மரத்தில் சிக்குண்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வீசிய துர்நாற்றத்தை தொடர்ந்து பிரதேசவாசி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் அகுரஸ்ஸ லத்துவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான அரபரகொடகே இந்திரஜித் புஸ்பகுமார என்றும், இவர் கடந்த ஒன்பது தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

மரண விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அகுரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

62ccb6fc-d60f-4fdc-a4f2-1fe3c0013167
(க.கிஷாந்தன்)

SHARE