இளைஞர் ஒருவரை நாய் போல் கயிற்றினால் கட்டி தெரு வழியே பெண்ணொருவர் இழுத்துச் சென்றுள்ளார். இந்த விடயம் தற்போது சர்வதேச இணையங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
சீனாவின் பியுஜியன் பிரதேசத்திலே கடந்த 9ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரபல செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. இதேவேளை குறித்த பெண் ஏன் இவ்வாறு நடந்துக்கொண்டார் என்று தெரியவரவில்லை என்றும், இதன் காரணமாக குறித்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ‘இவன் மனிதன் அல்ல நாய்’ என குறித்த பெண் தெரிவித்திருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.