இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை

261

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடமராட்சி , பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் அமல்கரன் என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் வீட்டிற்கு சற்று தொலைவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்ததாகவும், அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அவர் அதில் உரையாடிக்கொண்டு சென்ற போது சற்று தூரத்தில் நின்ற இனம் தெரியாத நபர்கள் கூரிய ஆயுதங்களால் அவரை தாக்கி விட்டு தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE