இளைய தளபதி விஜய்யின் ஸ்டைல் பைரவா படத்தில் தூள் கிளப்பும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஆனால், ட்ரைலர் பார்த்த அனைவரும் விஜய்யின் விக் குறித்து தான் கருத்து சொன்னார்கள்.
இதுக்குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் கூறுகையில் ‘தெறி படத்தில் மிகவும் ஷார்ட்டாக வெட்டிய ஒரே காரணத்தால், இந்த படத்தில் விக் வைக்கப்பட்டது.
உடனே படப்பிடிப்பு செல்ல வேண்டிய கட்டாயம், மேலும், பலரும் ஏன் இந்த விக் தேர்வு செய்தீர்கள் என்று கேட்கிறார்கள்.
படத்தில் சண்டைக்காட்சிகளில் முடியை கோதிவிடுவது போல சில காட்சிகள் இருக்கின்றது, அதற்காகவே இப்படி ஒரு விக் தேர்வு செய்தோம்’ என கூறியுள்ளார்.