நடிகை அமலாபால் மீது இப்போது பல நடிகைகளுக்கும் ஒரு கண் இருக்கிறது. இந்த வருடம் நடந்த திரையுலக சம்பவங்களில் ஒன்று அவரது விவாகரத்து.
யாரும் எதிர்பாராத ஒன்று, பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அமலாபால் பிறகுதான் வாழ்க்கை என்பதே என்ன என்று புரிகிறது என கூறினார். தற்போது தனுஷின் VIP 2 படத்தில் நடித்துவருகிறார்.
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே டாட்டா காட்டிவிட்டார்.
திருமணத்திற்கு முன்பு படப்பிடிப்பு தளங்களில் அமைதி காத்து வந்த அவர் இப்போதெல்லாம் யூனிட்டில் கேலி, கிண்டல் என பயங்கரமாக பேசுகிறாராம்.
திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்கள் கிடைக்கும் போது எப்படி இவருக்கு மட்டும் ஹீரோயினாக நடிக்கிறார் என வியந்து பார்க்கிறார்களாம்.
ஸ்பாட்டில் பேசிய அவர் கல்யாண வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று எதிர்பார்க்கவில்லை, எல்லாம் நல்லதுக்கே என ஜாலியாக பேசினாராம்.