இஸ்ரேலிய விமானப்படைகள் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள ஈரானிய சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்.

193

இஸ்ரேலிய விமானப்படைகள் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள ஈரானிய சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவல் தொடர்பாக சமூக வலைதளத்தில் காணொளி காட்சிகள் சில வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஆனால் அதுபோன்ற ஒரு தாக்குதல் நடத்தப்படவில்லை என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே சிரியா விமானப்படைகள் இஸ்ரேல் தக்குதலை இடைமறித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானிய சரக்கு கப்பலை குறிவைத்தே இந்த ஏவுகணை தாக்குதல் எனவும் ஒரு தகவல் பரவி வருகின்றது.

குறித்த தகவலுக்கும் இதுவரை எந்த ஊடகமும் உறுதியளிக்கவில்லை. ஆனால் மாகாணத்தின் வடப்பகுதியில் சக்தி வாய்ந்த தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு படைகள் உறுதி செய்துள்ளன.

SHARE