
2017இன் இதுவரையிலான காலப்பகுதியில் 265 இலங்கையர்கள் இஸ்ரேல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், குறித்த இலங்கையர்கள் அனைவரும் விவசாய தொழிலின் நிமித்தமே இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, கடந்த ஆண்டில் விவசாய தொழிலின் நிமித்தம் 359 பேர் வரையில் இஸ்ரேல் சென்றுள்ளனர்.
மேலும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் திணைக்களத்தின் ஊடாக இஸ்ரேலுக்கு, தொழில்வாய்ப்புக்காக ஆட்சேர்ப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.