இஸ்ரேல் சிறையில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும். சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கடந்த ஒரு மாதமாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் உடல் நிலம் குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீன கைதிகள் தொடர் உண்ணாவிரதம் இருப்பதால் அவர்கள் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. இஸ்ரேல் அரசு அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். இச்சம்பவம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கவலை அடைந்ததாக ஐ.நா. செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜார்ரிக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்ரேல் சிறைத்துறை கூறும்போது, ”65 பாலஸ்தீன கைதிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் யாரும் மோசமான நிலையில் இல்லை. நல்ல நிலையில்தான் உள்ளனர்.” என்று கூறியுள்ளது.