இஸ்லாமபாத்தின் புறநகர்ப் பகுதியில் குண்டு வெடித்ததில் 23 பேர் பலி

650

pak_CI-80x70பாகிஸ்தானின் தலை நகரான இஸ்லாமபாத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள சந்தை ஒன்றில் கைக் குண்டு வெடித்ததில் குறைந்த பட்சம் 23 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. பழக் கூடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு வெடித்ததில் பலர் காயமுற்றுள்ளதாகவும், அந்த நகர் மக்களை இச் சம்பவம் வேதனையிலும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளாதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமபாத்திற்கு மிக அன்மையிலுள்ள ராவல்பிண்டி நகரில் இடம் பெற்ற இக் குண்டு வெடிப்புச் சம்பவமானது, இப் பகுதியில் அண்மைக் காலங்களிள் இடம் பெற்ற இது போன்ற சம்பவங்களில் மிகவும் தாக்கம் வாய்ந்ததெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராவல்பண்டி நகரில் ராணுவ முகாம் ஒன்று அமையப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வெடிப்பிற்கான காரணம் புரியாத நிலை சகலர் மத்தியிலும் இனம் தெரியாத பீதியை ஏற்படுத்தியுள்ளது. இக் குண்டு வெடிப்பிற்குப் பயங்கரவாத இயக்கங்கள் எதனாலும் உரிமை கோரப்படாதமை, மக்கள் மத்தியில் கலவரத்தை அதிகரிக்கச் செய்துள்ளது-
சென்ற மாத முதற் பகுதியிலிருந்து தலிபான் இயக்கம் போர் நிறுத்தத்தை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதம் தரிக்காத மக்கள் போரில் கொல்லப்படுவதைத் தாம் கண்டிப்பதாகவும், அவர்களின் மரணம் வேதனைக்குரியதெனவும் தலிபான் இயக்கப் பேச்சாளர் கூறியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துப் பாகிஸ்தானில், கடும் கட்டுப்பாடுகளோடு கூடிய இஸ்லாத் அரசை நிறுவ தலிபான் இயக்கம் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. அத்தோடு தலிபானால் அறிவிக்கப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்தம் வருகின்ற வியாழக்கிழமையோடு முடிவிற்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE