Posted by Tamilaham Malarum on Sabtu, 5 Mei 2018
இஸ்லாம் தலைசிறந்த மார்க்கம்
இஸ்லாமிய வளர்பில் பெண்கள் ஒழுக்கத்துடன் வளர்ந்த விதம் அக்கா அபிநயா நடித்த ” மீசை ” குறும்படத்திலிருந்து ஒரு புகை பிடிக்கும் புகைப்படத்தை DP யாக வைத்தேன் !!!
Posted by Tamilaham Malarum on Sabtu, 5 Mei 2018
Posted by Tamilaham Malarum on Sabtu, 5 Mei 2018
Posted by Tamilaham Malarum on Sabtu, 5 Mei 2018
Posted by Tamilaham Malarum on Sabtu, 5 Mei 2018
, அக்கா அபிநயா நடித்த ” மீசை ” குறும்படத்திலிருந்து ஒரு புகை பிடிக்கும் புகைப்படத்தை DP யாக வைத்தேன் !!!
உடன் ” மீசை ” ( என்ன பெரிய மயிரா ? ) என எழுதியிருந்தேன் !!!
அந்த பதிவுக்கு ரியாக்ட் செய்தவர்களை 3 வகையாக பிறிக்கிறேன் …
1. படத்திற்கு விருப்பம் தெரிவித்தவர்கள் ..
2. படத்தை கடுமையாக விமர்சித்தவர்கள் ..
கலாச்சாரம் என்ன ஆவது ??
ஆணுக்கு பெண் நிகர் என புகைப்படித்து தான் காட்டனுமா ??
இவரா புதுமை பெண் ?? …
என்றவர்கள் ..
3. படத்தை வெறுக்கிறேன் ..
பெண் புகை பிடிக்க கூடாது , ஆணும் புகை பிடிக்க கூடாது ..
பெண்ணுக்கு புகை பிடிக்க உரிமை உண்டு, ஆனால் புகை பிடிப்பது தவறு ..
பெண்கள் புகைப்பிடித்தால் , அவர்கள் உடல் நலம் கெடும் …
இப்படி யோக்கியர்கள் போல ஆணாதிக்கம் பேசியவர்கள் …
////
இந்த மூன்றாம் பிறிவினரை கேட்கிறேன் !!!
ரஜினிகாந்த் ஸ்டைலா தம் அடிக்றப்போ ,
அஜித் ஸ்டைலா தம் அடிக்றப்போ ,
சிம்பு ஸ்டைலா தம் அடிக்றப்போ ,
தனுஷ் ஸ்டைலா தம் அடிக்றப்போ ….. உங்கள்ல யாருக்காவது இவ்வளவு கோபம் வந்துச்சா ?? !!!
அட செம சீனு பா , கெத்து னு பார்த்து ரசித்த அதே மனது ஏன் புகைப்படத்தை பார்த்ததும் எரியுது ??
ஆணும் தம் அடிக்க கூடாது னு , அதை ஒரு பெண் செய்யும் போது தான் புரியுதா ??
அட ரஜினிய பாக்குறப்போ தோனாதது ,,
சிவாஜிய பாக்குறப்போ தோனாதது ,,
தம் ன்ற பேர்ல ஒரு படம் வந்தப்போ தோனாதது ,,
வருடாவருடம் , பெஸ்ட் ஸ்டைலிஷ் ஸ்மோக்கர் அவார்ட் குடுக்றப்போ தோனாதது ,,
தனுஷ் , அஜித் னு விதவிதமா தம் அடிச்சு காட்னப்போ தோனாதது ,,
அபிநயா அடிக்றப்போ தோனுது னா
அது ஆணாதிக்கம் இல்லாம என்னங்க ??
இதே ஒரு ஆண் நடிகர் ஸ்டைலாக தம் அடிக்கும் படம் போட்டால் , இவ்வளவு கோபம் வந்திருக்குமா ??
அப்போதெல்லாம் ஏன் நம் மனதிற்கு எதுவுமே தோனல ,,
பெண் அடிக்றப்போ ” அய்யோ தம் ரெண்டு பேரும் அடிக்க கூடாது ” னு தோனுது ??
இதையெல்லாம் அலசி பகுத்தறிந்து பார்த்தால் ..
ஆண் தம் அடிக்கும் போது .. ” அட ஆம்பள பய்யன் பா , இப்போலாம் தம் அடிக்றது பேஷன் ஆயிட்ச்சு , அட அவன் உடல அவனே கெடுத்துகுறான் நமக்கென்ன , அட என்ன ஸ்டைலா அடிக்றான் , அம்பள பய்யன் தானே தப்பில்ல ” என்றெல்லாம் சாதாரணமாக கருதும் நம் மதி…
அதுவே பெண் அடிக்கும் போது தான் அதை ஆணும் செய்யக்கூடாது என சொல்ல தோனுகிறது !!!
அதாவது … ஒரு பழக்கம் அது ஆண் கையாளும் போது சகஜமாய் எடுத்துக்கொள்ளவும் …
அதுவே பெண்ணிடம் வரும்போது , தீய செயல் ஆவதற்கு காரணம் என்ன ??
பெண் என்பவள் அடக்குமுறைக்கு உட்பட்டவள் என்பதாலா ??
சில அறிவு ஜீவிகள் ,,
புகை பிடிக்க தனி நபருக்கு உரிமை உண்டு , ஆனால் புகை பிடிப்பது உடல்நலத்துக்கு கேடு என்றனர் !!!
அவர்களுக்கு ,,, அறிவுரை சொன்னதற்கு நன்றி !!!
சரி .. அதிகமாக இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் ,, அதிகமாய் ஆயில் ஃபுட் சாப்பிட்டால் இருதய நோய் வரும் !!!
அதற்காக இனிப்பு சாப்பிடுவது இருபாலருக்கும் தீங்கு விளைவிக்கும்
ஆயில் ஃபுட் சாப்பிட்டால் , செத்ருவீங்க னு சொல்வீங்களா ??
புகை பிடிப்பவருக்கு அதன் மூலம் கொஞ்சம் நிம்மதி வரலாம் , அல்லது இதமாக இருக்கலாம் , அல்லது வாசனை பிடித்திருக்கலாம் ..
அப்படியே அவர் அவரது உடலுக்கு அதனால் தீங்கு வருமென நினைத்தால், அவரே விடப்போகிறார் !!!
வேண்டுமென்றால் , அதிகம் புகை பிடிக்காதீங்க , கேன்சர் வருமாம் .. என பரிந்துரைக்கலாம் !!!
புகை பிடிக்கவே கூடாது என சட்டம் போட யாருக்கும் உரிமையில்லை !!!
இப்போது எலக்ட்ரானிக் சிக்ரெட் எல்லாம் வந்தாச்சு … அதை பரிந்துரைக்கலாம் !!!
மூலிகை சிகரெட் வந்தாச்சு , அதை பரிந்துரைக்கலாம் !!!
அந்த படத்தை பார்த்தவுடன் , அய்யோ பெண்களே புகை பிடிக்றாங்களா !! அப்போ அதை தடை பன்னனும் … னு சொல்றதே..
தனக்கு ஒரு நேர்க்கோட்டை விதிப்பதே ஆணாதிக்க சிந்தனை தான் !!!
மீசை என்ன பெரிய மயிரா ??
அபி அக்காவின் மீசை படத்தை தொடரந்து ” லெய்லா ஹடாமி ” அவர்களின் புகைப்பிடிக்கும் புகைப்படம் ஒன்றை DP யாக வைத்தேன் !!!
வழக்கம் போல் கிளம்பி வந்தனர் நம் பெருமை மிகு உடல்நல ஆய்வாளர்களும் ஆணாதிக்கவாதிகளும் !!!
இவர் உலக புகழ்பெற்ற “செபரேஷன்” என்ற ஈரானிய திரைப்படத்தின் நாயகர் !!!
இந்த படம் இவரது நடிப்புக்காக ஆஸ்கார் விருது வாங்கியது !!!
இவர் ஈரானிய பெண்ணிய சிந்தனையாளரும் கூட !!!
முந்தைய நாள் அபி அக்கா படம் இட்ட நான் , இன்று வேண்டுமெனவே இந்த படத்தை இட்டேன் !!!
உடனே கிளம்பி வந்த நம் கொள்கையாளர்கள் …
படம் புகை பிடப்பதை ஊக்குவிக்கிறது ,
சமுக அக்கறையற்று பதிவிடும் நீங்கள் பெண்ணியவாதியா ,
பெரியாரியம் பேசுவது என்ற பெயரில் கண்டதை பேசி பெயரை கெடுக்கிறீர்கள் ,
இது பெண்ணியமல்ல வெங்காயம் ,
பைத்தியம் முத்திறுச்சு ,
புகை பிடிப்பது இருபேருக்கும் உரிமை இல்ல ,
புகை பிடிப்பது சட்டப்படி குற்றம் ,
புகை பிடிப்பது தான் பெண்ணியமா ,
என பொங்கி எழுந்தனர் நம் பெண்கள் மேல் மிகுந்த அக்கறை உள்ளவர்கள் !!!
பாராட்டுகள் !!!
ஒரு ஸ்டாலின் படத்தையோ ,
மாவோ படத்தையோ ,
நேதாஜி படத்தையோ ,
சே குவேரா படத்தையோ ,
கெமால் பாஷா படத்தையோ ,
நெல்சன் மன்டேலா படத்தையோ ,
இப்படி புகை பிடிக்கும்படி பார்த்தப்போதோ , இல்லை யாரேனும் யாக வைத்தபோதோ ,, இப்படி பொங்கி எழுந்து உடல்நலக்கேட்டை கவனிக்காத நீ புரட்சியாளரா ? என கேட்டதுண்டா ??
அது புகைப்பிடிப்பதை ஊக்கப்படுத்துமே என சிந்தித்ததுண்டா ??
இல்லை , ஒருவரின் உடல்நலக்கேட்டை கண்டுக்கொள்ளாமல் என்ன புரட்சி வெங்காயம் பேசுற னு கேட்டதுண்டா ??
இல்லை அவர்களிடம் , புகைப்பிடிப்பது சட்டப்படி குற்றம் என கூறி காமடி செய்ததுண்டா ??
சே , மாவோ , கேமல் ஆனாலும் புகை பிடிக்க கூடாது என அவர்களிடம் …. அறிவுரையாவது செய்ததுண்டா ??
உண்மையில் நான் புகைப்பிடிப்பதை ஊக்கப்படுத்துவதே இல்லை !!!
நண்பர்களிடம் , நீ மது கூட அறுந்திக்கொள் ஆனால் புகை பிடிக்காதே என அறிவுரை செய்வதுண்டு !!!
அதை அவர்கள் விடுவதும் விடாததும் அவர்கள் உரிமை !!!
இரண்டு நாட்களாக நான் உரிமை சம்பந்தமாக தான் புகைப்பழக்கத்தை கையில் எடுத்தேன் !!!
ஒரு ஆணுக்கு , தான் புகை பிடிக்கலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் உரிமை உள்ளது !!!
ஆனால் பெண்ணுக்கு அது கொடுக்கப்படுவது இல்லை !!!
படத்தை பார்த்தவுடன் அவர் பெண் என்பதாலேயே , அவர் செய்யும் அந்த விடயம் சரியானதா தவறானதா என சிந்திக்க தூண்டுகிறது !!!
நமக்கு சே, ஸ்டாலினை எல்லாம் அப்படி பார்க்கும் போது அவர் செய்வதை பற்றி சிந்திக்க தோனவில்லை !!!
ஆகையால் , தான் செய்யும் ஒரு வேலை கவனிக்க பட வேண்டியதில்லை என்ற அங்கிகாரம் பெர அந்த நபர் ஆணாக தான் இருக்க வேண்டும் என்பதே மிகப்பெரிய ஆணாதிக்கம் !!!
படத்தை பார்த்தவுடன் இவர் யார் என ஒருவரும் கேட்கவில்லை !!!
அவரது புகை பிடிக்கும் செயல் தான் நோக்கப்பட்டது !!!
இதை உணர்த்த தான் மீண்டும் ஒரு படத்தை போட்டேன் !!!
பிரபலமான நபரின் படத்தை போட்டேன் !!!
ஏங்க …
சேவுக்கு , மாவோவுக்கு , கெமாலுக்கு , மண்டேலாவுக்கு , ஸ்டாலினுக்கு , நேதாஜிக்கு …. புகை பிடிக்க முடிவெடுக்கும் , புகைப்பிடிக்கும் , தேவை பட்டால் அதை நிறுத்தும் உரிமை இருப்பதை போல ….
சந்தியா , சீலா , ருக்மினி , பவித்ரா , காயத்ரிகளுக்கும் உரிமை இருக்கு !!!