ஈராக்கில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல்: 23 பேர் சாவு

501
ஈராக்கில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் மசூதியில் இருந்து வெளியே வந்த ஷியா பிரிவினர் உள்பட 23 பேர் பலியானார்கள்.

வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொடைப்படை தீவிரவாதி, பாக்தாத் அருகே உள்ள யூசிபியா நகரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி மீது மோதி வெடிக்கச் செய்ததில் 3 போலீஸ்காரர்களும், 4 பொதுமக்களும் பலியாகினர். 21 பேர் காயமடைந்தனர்.

அதன்பின்னர், சமாரா அருகே உள்ள சோதனைச்சாவடி மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு பாக்தாத்தில் பிற்பகல் தொழுகைக்குப் பிறகு மசூதியில் இருந்து வெளியேறிய ஷியா பிரிவினரை குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல் நடத்தினான். இதில், 8 பேர் இறந்தனர். 16 பேர் காயமடைந்தனர்

SHARE