ஈராக் தாக்குதலில் 200 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி: முடிவு நெருங்குறதா?

249

 

ஈராக் நாட்டின் எல்லையில் வான்வழி தாக்குதல் நடத்தியதில் சுமார் 200-க்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் படர்ந்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈராக் எல்லையில் உள்ள Al-Ba’aj மாகாணத்திற்குள் ஐ.எஸ் தீவிரவாதப் படை ஒன்று நுழைய உள்ளதாக ஈராக் ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவல் மூலம் உஷாரான ஈராக் படைகள் கடந்த சில தினங்களில் வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.

தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தலைவர்கள் உட்பட 200-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை ஈராக் ராணுவம் நேற்று உறுதிப்படுத்தியது.

மேலும், தீவிரவாதிகள் நுழைய முயற்சிப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து எல்லைகள் முழுவதிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்ட இந்த ஆப்ரேஷனை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளதாக ஈராக் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக ஐ.எஸ் தீவிரவாதிகளின் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விரைவில் ஐ.எஸ் அமைப்பு பலவீனமடைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE