ஈரானிடம் இருந்து மீண்டும் எரிபொருள் கொள்வனவு

242
ஈரானிடம் இருந்து மீண்டும் எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால், இலங்கை 2012 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை நிறுத்தியது.

ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், மீண்டும் அந்நாட்டிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கனிய எண்ணெய் மற்றும் பெற்ரோலிய வாயு துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

துறைக்கு பொறுப்பான அமைச்சர் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE