ஈழ மக்களுக்கு ஆதரவாக லண்டனில் வெடித்தது போராட்டம்… ஆயிரக்கணக்காணவர்கள் பங்கேற்பு

209

இலங்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புலம் பெயர் தமிழ் மக்களினால் லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் 10 Downing Street , Westminster , London SW14 2AA எனும் இடத்தில் இன்று மாலை 4 மணி முதல் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாக இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு அல்லது நீடிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிரித்தானிய ஆதரவு வழங்கக்கூடாது எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை படைகளால் அபகரிக்கப்பட்ட கோப்பாபுலவு மக்களினது நிலங்களை மீள கையளிக்குமாறும், அதே போன்று வடக்கு கிழக்கு தாயகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விடுவிக்கப்படாத காணிகளை பெற்றுத்தருமாறும் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE