உக்ரைன் அதிபர் ஐநா.சபைக்கு விடுத்த கோரிக்கை!

180

 

ரஷ்யாவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) ஐநா.சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நியுயார்க்கில் நடைபெற்ற ஐநா.சபையின் 77வது கூட்டத்தில் பேசிய ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) , உக்ரைன் மீது போர்த் தொடுத்த ரஷ்யாவை தண்டிக்கும்படியும், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா புரிந்துள்ள போர்க்குற்றங்களை விசாரிக்க தனித் தீர்ப்பாயம் அமைக்கும்படியும் வலியுறுத்தினார்.

மேலும் ரஷ்யாவை சர்வதேச அமைப்புகளில் இருந்து நீக்கி தனிமைப்படுத்தவும் அவர் கோரிக்கை வைத்தார். போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு நிவாரண நிதி அளிக்கவும் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE